Tuesday, June 12, 2007

<>கருத்துரையாடல் கூட்டம்<>

கருத்து - கருத்துரையாடல் கூட்டம்.

நேரம்: மாலை 5:30 நாள்:20-06-2007.


இடம் : ரஷ்ய கலாச்சார மையம்,

27, கஸ்தூரி ரங்கன் சாலை,

ஆழ்வார்பேட்டை,

சென்னை.

தலைப்பு:-

உரிமைகள் - வரம்பு/எல்லை

பேச்சாளர்கள்:-
இராதா இராஜன்,
இணைச் செயலர்,
விஜில் பொது கருத்து மையம்.

வீர சந்தானம்,
ஓவியர்.

கார்த்தி.சிதமபரம்,
கனிமொழி கருணாநிதி
கருத்து அமைப்புக்காக‌.

Wednesday, November 29, 2006

<<>>மரண தண்டனை - விவாதம்<<>>

கார்த்தி சிதம்பரம், கவிஞர் கனிமொழி நடத்திய விவாதக் கூட்டம்.
சென்னை: சென்னையில் நேற்று நடந்த "கருத்து' அமைப்பு நடத்திய மரண தண்டனை குறித்த விவாத கூட்டத்தில் வக்கீல் அருள்மொழி தெரிவித்த கருத்தால் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.


கார்த்தி சிதம்பரம் மற்றும் கனிமொழி உள்ளிட்டோரால் நடத்தப்படும் "கருத்து' அமைப்பு சார்பில் "மரண தண்டனை ஒரு விவாதம்' என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து கார்த்தி சிதம்பரம் பேசும்போது, ""பிரியதர்ஷினி கொலை, ஜெசிகாலால் கொலை, அப்சல் மற்றும் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துõக்கு ஆகியவை இப்போது பெரும்பாலான மக்கள் பேசும் செய்தியாக உள்ளன. எனவேதான், மரணதண்டனை வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த விவாதத்தை நடத்துகிறோம். நம் நாட்டுச் சட்டத்தில் மரணதண்டனை என்ற ஒன்றை விதிக்கலாம் என்று இருக்கும் போது அதை நிறைவேற்றுவது தான் சரியானது. நாம் மதிக்கின்ற கோர்ட்டால் அந்த தண்டனை விதிக்கப்படுமானால் அதை ஏற்றுக் கொள்வதுதான் சரியானது,'' என்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் சுரேஷ் பேசும்போது, "" யாருக்கு துõக்கு தண்டனை விதித்தாலும் அது தவறு என்பதையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மனிதனின் வாழ்வை முடிக்கும் ஒரு தண்டனையை இன்னொரு மனிதன் தரக்கூடாது. பெரும்பாலும் அப்பாவிகள் தான் இந்த தண்டனையைப் பெறுகிறார்கள். இந்த நாட்டில் நீதித்துறையும், காவல்துறையும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்ட பலர் பிற்காலத்தில் நிரபராதிகள் என நிருபிக்கப்பட்டுள்ளது,''என்றார்.

வக்கீல் அருள்மொழி பேசும்போது, ""தண்டனை என்பது மனிதன் திருந்துவதற்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும். துõக்கு தண்டனை என்பது மனித இனத்திற்கு மரியாதை சேர்ப்பதல்ல,'' என்றார்.

தொடர்ந்து பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசன் பேசியதாவது:
மனித உயிரை மதிக்கின்ற பண்பாடு கொண்டது நமது நாடு. பயங்கரவாதிகளுகளுக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் அப்பாவி மக்கள் ஏராளமானவர்கள் பலியாகும்போது அதற்கென குரல் கொடுப்பதில்லை. இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் மரணதண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் தேவையாய் உள்ளன. துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் இது வரை தனது செயலுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. இதே வழக்கில் பேராசிரியர் ஜிலானி விடுதலை செய்யப்பட்ட போது, கோர்ட் தீர்ப்பை வரவேற்றவர்கள் அப்சலுக்கு தண்டனை வழங்கும்போது மட்டும் அது தவறு என்று சொல்வது நியாயமானது அல்ல.

கடந்த 20 ஆண்டுகளில் 62 ஆயிரம் பேரை பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்துள்ளோம். இத்தனை மனிதர்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நியாயமா? பொன்பரப்பியில் வங்கியை கொள்ளையடிக்க வந்த பயங்கரவாத கும்பலை அந்த ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். அந்த ஊர் மக்களை கொன்றவர்களை அரசு பாராட்டியது குறிப்பிடத்தக்கது. மரணதண்டனை போன்ற தண்டனைகளை எடுத்து விட்டால் பயங்கரவாதத்திற்கு ஒரே மாற்று பொன்பரப்பி போன்ற சம்பவங்கள்தான் என்று மக்கள் முடிவெடுத்து விடும் அபாயம் உள்ளது.
இவ்வாறு இல. கணேசன் பேசினார்.


கவிஞர் கனிமொழி பேசுகையில், ""மரண தண்டனை உள்ளதால் குற்றங்கள் ஏதும் குறையவில்லை. கொடுங்குற்றங்களைப் புரிவோருக்கு அச்சத்தை, ஏற்படுத்தாத ஒரு தண்டனை எதற்காக இருக்கிறது. மேலும், நேற்று பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் பிற்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டு விழா எடுக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

தொடர்ந்து பார்வையாளர்கள் கருத்துகளை தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மரணதண்டனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பார்வையாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் கடைசி கட்டத்தில் அரங்கில் நுழைந்த கவிஞர் அறிவுமதி, தியாகு, இயக்குனர் சீமான் உள்ளிட்டவர்களின் ஆதரவாளர்கள் இல.கணேசன் மட்டும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை எதிர்த்து குரல் எழுப்பினர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தான் பதில் அளிக்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் கூறிய பின்பும் கூட்டம் அமைதியாகவில்லை. நிகழ்ச்சியின் துவக்கம் முதல் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் இந்த கும்பலின் கூச்சலால் அதிருப்தியடைந்து எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இந்த நேரத்தில் பேசிய வக்கீல் அருள்மொழி, குறிப்பிட்ட சமுதாயத்தை கடுமையாக தாக்கிப் பேசியதோடு, அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கருத்துக்களை பேசினார். இதற்கு பார்வையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிவுமதி உள்ளிட்டவர்கள் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பார்வையாளர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தியாகு மட்டும் கடைசி கேள்வியை கேட்பார் என அறிவிக்கப்பட்டு அவர் கேள்வி கேட்டார். அதற்கு இல.கணேசன் பதில் அளித்ததும் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு சார்பாக கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாக பார்வையாளர்கள் கவிஞர் கனிமொழியிடம் புகார் தெரிவித்தனர்.

Friday, November 24, 2006

<<>>"மரணதண்டனை - ஒருவிவாதம்" <<>>






...................<<>>கருத்து<<>>................
0........தடையற்ற எண்ணங்களுக்கான சூழல்.......0

அன்புடையீர்,

வணக்கம்.
இம்மாதம் 29ம் தேதி (29.11.2006)
புதன்கிழமை மாலை 5.30 மணியளவில்
சென்னை ஆழ்வார்பேட்டை
எம்.சி.டி.எம்.சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி,
ஸ்ரீமதி சிவகாமி பெத்தாட்சி கலையரங்கில்,
கருத்து அமைப்பின் ஆறாவது கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகச்சியில்,

இல.கணேசன்
மாநில தலைவர் - பாரதிய ஜனதா கட்சி

வழக்கறிஞர். அ.அருள்மொழி

வழக்கறிஞர்.வீ.சுரேஷ்,
தலைவர்,
மக்கள் சிவில் உரிமை கழகம் - தமிழ்நாடு

ஆகியோர் பங்கேற்று
"மரணதண்டனை - ஒருவிவாதம்"
- என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளவும்,
இதுதொடர்பான கருத்தாடலில்
பங்கேற்கவும் தங்களை அன்புடன்
அழைக்கிறோம்.
கருத்துக்காக,
கார்த்தி ப.சிதம்பரம்.
கனிமொழி கருணாநிதி.